• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதி வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து! நால்வர் படுகாயம்

இலங்கை

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெராயா பகுதியின் மேல் பிரிவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டு பாதிப்பு காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முச்சக்கரவண்டி சாரதி அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையினாலும் முச்சக்கர வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையாலும் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச் சென்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply