ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த நிலையில் தற்போது குறித்த வேலைநிறுத்த திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.























