• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிங்டம் ஒரு மைல்கல் திரைப்படமாக இருக்கும் - அனிருத்

சினிமா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதில் அனிருத் பாடல் நேரலையாக பாடினார். அதை ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் கொண்டாடினார்கள். அப்போது அனிருத் கூறியதாவது " நான் இதுவரை இப்படி எந்த திரைப்படத்திற்கும் சொன்னதில்லை. கிங்டம் திரைப்படம் விஜய் தேவரகொண்டா திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் திரைப்படமாக இருக்கும்"

படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.
 

Leave a Reply