மத்திய மாகாணத்தின் வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு
இலங்கை
மத்திய மாகாணத்தின் கட்டுகித்துல (Katukithula) வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
ஒரு வயது மதிக்கத் தக்க ஆண் சிறத்தை ஒன்றே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லியோபோகான் ஸ்ரீலங்கா (LEOPOCON Sri Lanka) தெரிவித்துள்ளது.
சிறத்தையின் உயிரிழப்புக்கு ஹக்கா பட்டாஸ் பொறிகள் தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக இலாப நோக்கற்ற சிறுத்தை பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வனவிலுக்கு பாதுகாப்புத் துறை அந்த சிறத்தையின் உடலை மீட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லியோபோகான் ஸ்ரீலங்கா மேலும் குறிப்பிட்டுள்ளது.























