போதைப்பொருளுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது
இலங்கை
போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர தெற்கு, குடாதெனிய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வைத்து நேற்று (28) குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 265 கிராம் ஹெராயின் மற்றும் 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
58 வயதான அலுவலக உதவியாளர் ஹோகந்தர தெற்கில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மேலதிக விசாரணைக்காக மாலபே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
























