• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதியோருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

இலங்கை

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பயனாளிகள் நாளை முதல் தங்கள் கணக்குகளில் இருந்து தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 600,768 தகுதியுள்ள நபர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

மேலும், இந்த மாதம் வழங்குவதற்காக மொத்தம் ரூ. 3,003,840,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply