சத்யஜித் ரே மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு
சினிமா
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை வங்கதேச அரசு வெளியிட்டது. இதையடுத்து, இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில், சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.






















