31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
இலங்கை
பெங்கொக்கில் இருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருட்களின் ஒரு தொகுதி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட 117 கிராம் குஷ் போதைப்பொருளின் பெறுமதியானது 31 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, 48 வயதுடைய மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயணி மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.























