• Welcome to TamilsGuide
செய்திகள் 1

We Don't care- உக்ரைன் போரை நிறுத்த 50 நாள் கெடு விதித்த டிரம்ப் - ரஷியா பதிலடி

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்தார். ரஷியா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷியா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார். தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது என்று தெரிவித்தார்.

டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் நமது அதிபர் புதினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது.

யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை (We Dont care). வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். அதிபர் புதின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
 

Leave a Reply