ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் ராமாயணா பட்ஜெட்
சினிமா
இந்திய சினிமாவில் வருடம் வருடம் ராமாயணம் கதையை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கபூர், சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கின்றனர்.
படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் அதற்கு அடுத்த பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இரண்டு பாகமும் சேர்ந்து சுமார் 4000 கோடி ரூபாயில் தயாராகி வருகிறது.
இந்த பட்ஜெட் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ட்யூன் 1 மற்றும் 2 பாகம் தயாரித்த செலவைவிட அதிகமாகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
திரைப்படம் ஐமேக்ஸ் திரையில் வெளியிட இருக்கின்றனர். படத்தின் VFX காட்சிகளை 8 முறை ஆஸ்கர் விருது வென்ற DNEG நிறுவனம் மேற்கொள்கிறது. இசையை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மேற்கொள்கின்றனர்.























