• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கை

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.

அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தங்கள் விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆறு தாய்லாந்து நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட குழுவினர் தற்போது மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
 

Leave a Reply