• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விடைபெற்றது பாத்திய என்ற காட்டு யானை

இலங்கை

குருணாகல் – பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ‘பாத்திய’ என்ற காட்டு யானை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்துள்ளது.

30 முதல் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த யானைக்கு பேராதனை பல்கலைக்கழக கால்நடை அறிவியல் பேராசிரியர் அசோக தங்கல்ல தலைமையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெற்று வந்த காலத்தில் ‘பாத்திய’ என்ற காட்டு யானை பல தடவைகள் நீர்நிலைகளில் தவறி விழுந்ததால் அதன் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து ‘பாத்திய’ என்ற காட்டு யானைக்கு உணவு அளித்து அதனை பாதுகாத்து வந்த நிலையில் ‘பாத்திய’ இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply