• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பதுளையில் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த கார் - இருவர் உயிரிழப்பு

இலங்கை

மஹியங்கனை-பதுளை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று மாபகடவெவ பகுதியில் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று (15) காலை 07.00 மணிளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தினை அடுத்து மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸ் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

பின்னர், மீட்கப்பட்ட அவர்கள் உடனடியாக அம்பியூலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தின.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply