இலங்கைக்கான தனது பிரீமியம் சலுகையை விரிவுபடுத்தும் எமிரேட்ஸ்
இலங்கை
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே இயங்கும் EK650/651 விமானங்களில் அதன் மறுசீரமைக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானங்களை பயன்படுத்தவுள்ளது.
இதன் மூலம், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட இரண்டாவது தினசரி விமானமாக எமிரேட்ஸ் மாறும்.
தற்போது, எமிரேட்ஸின் விரிவான வலையமைப்பில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் பிரீமியம் எகானமியை வழங்குகின்றன.
பிரீமியம் எகானமியை வழங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் கொழும்புக்கான பயணங்களைத் திட்டமிடுபவர்கள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்து, உயர்ந்த பயண அனுபவத்தையும் அனுபவிக்கலாம்.
எமிரேட்ஸின் EK650 விமானம் துபாயிலிருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பு வந்தடைகிறது.
திரும்பும் விமானம் EK651 கொழும்பிலிருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு துபாய் சென்றடைகிறது.
(துபாய் நேரம்)
பிரீமியம் எகானமி டிக்கெட்டுகளை emirates.com, எமிரேட்ஸ் ஆப் அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர்கள் மூலமாகவும், எமிரேட்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.






















