• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99- வது திரைப்படத்தில் விஷால்

சினிமா

விஷால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து விஷால் அவரது 35-வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜை விழாவில் நடிகர் ஜீவா மற்றும் கார்த்தி கலந்துக் கொண்டனர். படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply