• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புனர்வு வாரம் ஆரம்பம்

இலங்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புனர்வு வாரம் இன்று முதல் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய வேலைத்திட்டத்தின் இலக்காக அமைந்துள்ளது.

அந்தவகையில் ‘பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்’என்ற தொனிப்பொருளில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் இன்று முதல் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த தேசிய முன்னெடுப்பானது நிதியியல் உறுதிப்பாட்டினைப் பேணுதல் மற்றும் நிதியியல் வாடிக்கையாளரின் நல்வாழ்வை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து  மத்தியவங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்“

விழிப்புணர்வு வாரம் முழுவதும், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களுடன் தொடர்புடைய சட்டஏற்பாடுகள்,அத்தகைய வியாபார மாதிரிகளின் ஏமாற்றும் தன்மை மற்றும் கட்டமைப்பு, பிரமிட் திட்டங்களில்முதலிடுவதன் நிதியியல் மற்றும் , தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், மற்றும்பாதிக்கப்பட்டவர்களின் அனுபவித்த துன்பங்கள் போன்ற விடயங்கள் பற்றி பங்கேற்பாளர்களுக்குஅறிவூட்டப்படும்.

பரந்தளவிலான மற்றும் செயல்திறன்மிக்கவிதத்தில் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு பலவகை ஊடக உபாயங்கள் உபயோகிக்கப்படும். பிரச்சார நடவடிக்கைகளில் முனைப்போடு பங்குபற்றி விடயங்கள் பற்றி அறிந்திருக்குமாறு,லங்கைமத்திய வங்கி அனைத்து பொதுமக்களையும் ஊக்குவிக்கிறது.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முப்படையினர், தேசிய பாதுகாப்புத் திணைக்களஆளணி,; பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்உள்ளடங்கலான சனத்தொகையின் பரந்தளவிலான பிரிவினர் மத்தியில் பிரசார நடவடிக்கை கணிசமான தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

விழிப்புணர்வு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 6,172 பாடசாலைகள் மற்றும் 14,022 கிராமசேவையாளர்கள் பிரிவினூடாக மக்களைச் சென்றடைந்து, அடிப்படை மட்டத்தில் உள்ளவர்களைஉள்ளடக்குவதையும் சமூக ஈடுபாட்டையும் உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply