• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீடு விரைவில்...

சினிமா

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகியுள்ளது.

இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் இசை விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply