அமைச்சர் சரோஜா போல் ராஜுக்கும், பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையே விசேட சந்திப்பு
இலங்கை
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜுக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஹரேந்திர சில்வாவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி, அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலானது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழு (NCPA) மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் (DPCCS) ஆகிய அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், உலகளாவிய புதிய போக்குகள், இலங்கையின் குழந்தைகள் பாதுகாப்பு அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவ அறிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன.
இதற்காக, துறை சார்ந்த நிபுணர்கள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் அடங்கிய பல்துறை செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது பேராசிரியர் ஹரேந்திர சில்வா , தான் தலைவராக இருந்த காலத்தில் பெற்ற மதிப்புமிக்க அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.























