மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு
இலங்கை
மட்டக்களப்பு ,கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை 1.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவர் 23 வயதான எஸ்.நிசாந்தன் என பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























