• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியர்களுக்கு UAE வாழ்நாள் கோல்டன் விசா வழங்கும் புதிய திட்டம் - சொத்து, முதலீடு தேவையில்லை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் இனி முதலீடு இல்லாமல் வாழ்நாள் கோல்டன் விசா (Lifetime Golden Visa) பெறலாம்.

ஐக்கிய அரபு அமீரக (UAE) அரசு புதிதாக அறிவித்துள்ள நாமினேஷன் அடிப்படையிலான விசா திட்டம் மூலம், இனி இந்தியர்கள் நிலம் வாங்கவும், தொழில் தொடங்கவும் தேவையில்லாமல் வாழ்நாள் கோல்டன் விசாவை பெறலாம்.

ஒரு முறை மட்டுமே AED 1,00,000 (இந்திய ரூபாயில் சுமார் 23.4 லட்சம்) செலுத்துவதன் மூலம் இந்த விசா கிடைக்கிறது.

இந்தியர்களுக்கு தனி வாய்ப்பு

இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் இதற்கான செயல்பாட்டை Rayad Group எனும் கான்சல்டிங் நிறுவனம் வழிநடத்துகிறது.

UAE Golden Visa 2025, India UAE visa update, UAE visa without investment, Lifetime visa for Indians, Golden visa nomination route, UAE digital visa application, Rayad Group Golden Visa, UAE eSports visa India, UAE visa new categories, Golden visa eligibility Indians

கோல்டன் விசா யாருக்கு?

மொத்தம் 10 முக்கிய பிரிவுகள் மற்றும் 5 புதிய பிரிவுகளுக்குள் Golden Visa பெற வாய்ப்பு உள்ளது:

    முதலீட்டாளர்கள்
    தொழில் தொடங்குபவர்கள்
    விஞ்ஞானிகள்
    ஆய்வாளர்கள்
    ஆசிரியர்கள்
    செவிலியர்கள் (15 வருட அனுபவம்)
    டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள்
  E-Sports வீரர்கள் (வயது 25+)

40 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சொகுசுப்படகு (Yacht) வைத்திருப்பவர்கள்

விசா விண்ணப்பம் எளிமையானது

விசா விண்ணப்பம் முழுமையாக டிஜிட்டல் முறையில் செய்யலாம். ICP Smart Services அல்லது GDRFA Dubai இணையதள/மொபைல் செயலியில் பதிவு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்:

    பாஸ்போர்ட்
    கல்வி/தொழில்முறை சான்றிதழ்கள்
    வருமான/முதலீட்டு ஆதாரங்கள்
    அனுமதிப் பத்திரங்கள் 

விசா கட்டணம்: AED 2,800 - 4,000 வரை. மருத்துவ பரிசோதனை மற்றும் பயோமெட்ரிக் பதிவு நடைபெறும். 30 நாட்களில் கோல்டன் விசாவும் Emirates ID-யும் கிடைக்கும். 
 

Leave a Reply