• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

இலங்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து அனைத்து சாலைகளிலும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகிய நிலையில் ,அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இதன் விளைவாக, இந்தப் பகுதிகளில் திடீர் ஆய்வு உட்பட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply