ராம் படங்களில் பறந்து போ ரொம்ப ஸ்பெஷலானது- வெற்றி மாறன் நெகிழ்ச்சி
சினிமா
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பறந்து போ படம் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு அப்பாவாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷலான படங்கள். அதில், பறந்து போ திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலானது.
ராமுடைய படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு இந்த படம் ரொம்ப அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தின் தந்தையின் சிந்தனை முறையில் என்னையும் கொண்டு சென்றுவிட்டார்.
நடிகர் சிவா சிரமமின்றி தந்தை கதாப்பாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நெருக்கத்தில் இருக்கு. படத்தில் பல இடங்களில் இப்படி இருந்திருக்கலாமே, அப்படி இருந்திருக்கலாமே என்று சிந்திக்க வைத்திருக்கிறது.
படம் பார்த்து வந்ததில் இருந்து என்னுடைய குழந்தைகள் பற்றி நான் அதிகம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.























