• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

இலங்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என்றும், நேர்மாறாகவும் இது இருக்கும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply