வானத்தில் 26,000 அடி கீழே இறங்கிய விமானம்.. மரணத்தின் விளிம்பில் பயணிகள் செய்த செயல்
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப் 191 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 26,000 அடி கீழே இறங்கியது.
20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாக விழுந்தன. பயணிகளும் ஊழியர்களும் பீதியடைந்தனர்.
பயணிகள் சிலர் உயில் எழுதத் தொடங்கி, அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.
பதற்றமான சூழ்நிலையிலும், விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.






















