மீண்டும் இணையும் கேம் சேஞ்சர் கூட்டணி
சினிமா
ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் படும் தோல்வியை சந்தித்தது.
நேற்று நித்தின் நடித்துள்ள தம்முடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அப்படத்தையும் தில் ராஜு தயாரித்துள்ளார். பல நேர்காணலில் ராம் சரணிற்கு நல்ல ஒரு வெற்றி திரைப்படம் கொடுக்க முடியவில்லை என மனம் வருந்தி தில் ராஜு பேசியுள்ளார்.
நேற்று நடந்த விழாவில் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை தில் ராஜு கூறினார் அப்போது அவர் " கேம் சேஞ்சர் திரைப்படம் நாங்கள் நினைத்தது போல ஓடவில்லை, ராம் சரணை வைத்து சூப்பர் ஹிட் திரைப்படம் தயாரிக்கமுடியவில்லை என வருத்தம் இருக்கிறது. அதனால் அடுத்து ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை ராம் சரணை வைத்து தயாரிக்கிறேன் அதற்கான பணிகள் நடந்துக் கொண்டு இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்" என கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.






















