• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைவிடப்பட்ட வடமாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க போராட்டம்

இலங்கை

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினர் உறுதி வழங்கியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை வடக்கில் சேவை முடக்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து இருந்தோம்.

ஆனால், தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரபபினர் இனிவருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அவைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றார்.
 

Leave a Reply