திருக்குறள் திருவள்ளுவருடன் திரைப்பயணம் படத்தின் திரைவிமர்சனம்
சினிமா
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் அங்கீகாரம் பெற முயற்சிக்கும் கதை.
கதைக்களம்
வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதோடு, ஒன்னே முக்கால் அடிகளை கொண்ட செய்யுள்களை எழுதி, அதை புத்தமாக தொகுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரது காதல் மனைவி வாசுகி. அவர் எழுதிய சில செய்யுள்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு எடுத்துச் சென்று அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக அவரது செய்யுள்கள் இல்லாததால் அதை மதுரை தமிழ்ச் சங்கம் நிராகரித்து விடுகிறது.
இந்நிலையில் துரோகத்தால் ஆட்சியை பிடிக்கும் அரசருக்கும் , வள்ளுவர் வாழ்ந்து வரும் ராஜ்ஜியத்திற்கும் இடையே போர் உருவாகிறது.
ஒரு பக்கம் தனது புத்தகப் பணி மறுபக்கம் மக்களுக்கு நல்லாட்சி அமைவதற்கான யுத்த பணி என்று பயணிக்கத் தொடங்கும் திருவள்ளுவர் தனது புத்தகமான திருக்குறளை அரங்கேற்றினாரா?, போர் அவர் நினைத்து போல் மக்களுக்கு சாதகமாக அமைந்ததா? அதற்கு பிறகு என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
திருவள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன மிகவும் மெல்லிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல காட்சிகளில் அழகான நடிப்பை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்திருந்தார்.
அதேபோல் அவரது மனைவி வாசுகி கேரக்டரில் நடித்திருந்த தனலட்சுமி, பாண்டிய மன்னனாக நடித்துள்ள ஓஏகே சுந்தர், புலவராக வரும் கொட்டச்சி, பரிதியாக வரும் குணா பாபு உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
திருக்குறள் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத நூலாகும் என்பதை இந்த தலைமுறையினருக்கு எடுத்தும் சொல்லும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலகிருஷ்ணன். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். நடிகர்களின் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் வள்ளுவர் காலத்தில் படமாக்கப்பட்டது போல் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். அவரது ஒளிப்பதிவின் மூலம் நம்மை 2000 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்து செல்கின்றார்.
இசை
இளையராஜா இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
Ramana Communications presents நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.






















