சூடானில் சோகம்- தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






















