நடித்தால் ஹீரோவாதான் நடிப்பேன்... டிராகன் 100வது நாள் கொண்டாட்டத்தில் பேசிய பிரதீப் ரங்கநாதன்
சினிமா
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான 'டிராகன்' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்த இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், டிராகன் படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "அஸ்வத் ஓ மை கடவுளே படம் இயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் என்னை அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டார்.
ஆனால் நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் லவ் டுடே படத்தை ரிலீசுக்கு முன்பு அஸ்வத்துக்கு காண்பித்தேன். அதன் பிறகு, என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குகிறாயா என்று அவரிடம் கேட்டேன். லவ் டுடே படம் ஹிட்டானதால் உடனே நாங்கள் அடுத்த படத்தில் இணைந்தோம்.
என்னுடைய இயக்கத்தில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்துவிட்டேன். மற்றவர்களுடைய டைரக்ஷனில் நடிக்க முடியுமா என்று பேசுவார்கள். இந்தப் படம் ஹிட்டாகியிருக்கிறது. நான் ஆடியன்ஸாகிய உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.





















