• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா – நானுஓயா ரயில் பாதையை அபிவிருத்தி செய்ய திட்டம்

இலங்கை

நுவரெலியா – நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோதே அவர் இதனை கூறினார்.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ரயில் பாதையின் உரிமை ரயில்வே திணைக்களத்தின் கீழ் இருக்கும்போது பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வரவிருக்கும் பட்ஜெட்டில் பல புதிய ரயில்களை முன்மொழியவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply