• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிச்சைக்காரன் 3 எப்போது வெளியாகும் - அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி

சினிமா

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தும் இயக்கியும் வெளியான படம் 'பிச்சைக்காரன் 2'. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் குவித்தது.

இதனை தொடர்ந்து 'பிச்சைக்காரன் 3' படம் உருவாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் 'பிச்சைக்காரன் 3' குறித்த அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில், 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பிச்கைக்காரன் 3' வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற 'மார்கன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனியிடம் 'பிச்சைக்காரன் 3' குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் ஆண்டனி கூறுகையில், 'பிச்சைக்காரன் 3' படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் மூன்றாம் பாகம் இருக்கும். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடையில் 'பிச்சைக்காரன் 3' படம் வெளியாகும் என தெரிவித்தார். 
 

Leave a Reply