• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 12 பேர் கைது

இலங்கை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிபரின் பணிப்புரைப்படி, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கையில் 50 பொலிசார் மற்றும் 6 விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு, பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முக்கிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படக் கூடிய, வாகன இலக்க தகடுகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் பக்கக் கண்ணாடிகள் இல்லாத 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 3 நபர்களும், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின்படி தேடப்பட்டு வந்த 4 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேரும், கஞ்சாவுடன் 3 பேரும் என மொத்தம் 12 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply