• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் தந்தையை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் - சோகத்தில் தவிக்கும் குடும்பம்

இலங்கை

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின் பிறிதொரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன். மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
 

Leave a Reply