மறந்த சம்பள பாக்கி…40 ஆண்டுக்கு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்
சினிமா
சினிமாவில் நன்றி மறத்தல் என்பது சாதாரணம். பல படங்களில் நடித்து முடித்த உடன் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனால் பிரபல நடிகை ஒருவருக்கு நடித்த படத்தின் சம்பள பாக்கியை நாற்பது ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். இங்கல்ல மலையாள பட உலகில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பள பாக்கி நடிகை சாரதாவிற்கு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகள் ஆன பின்னும் தயாரிப்பாளரின் நேர்மையை பார்த்த சாரதா அப்படியே நெகிழ்ச்சியில் திகைத்தார். இருவரும் தங்களது மலரும் நினைவுகள் குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். இந்த சம்பவம் மலையாள சினிமா உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம ஆஃபர்.. சென்னையில் சொந்த வீடு வாங்க வாய்ப்பு வழங்கும் டிவிஎஸ் எமரெல்ட்.. மிஸ் பண்ணாதீங்க 1960ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் ஊர்வசி சாரதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என படு பிஸியாக இருந்த ஒரு நடிகை இவர். 1963ஆம் ஆண்டில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான குங்குமம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தேசிய அளவில் சிறந்த நடிகைகளை கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் ஊர்வசி விருதை 3 முறை பெற்ற ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர். இது தான் அவரது பெயருக்கு முன்னர் ஊர்வசி என்ற பட்டம் வரக் காரணம்.
இவர் நடித்த என்னை போல் ஒருவன், துலா பாரம், ஞான ஒளி, மிஸ்டர் பாரத் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஊர்வசி சாரதா பிஸியாக இருந்த அந்த சமயத்தில் 1979ஆம் ஆண்டில் சி.ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் புஷ்யராகம் என்ற ஒரு மலையாள படத்தை தயாரித்தார், கேரள மாநிலம் அலுவா நகரைச் சேர்ந்த தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
இதனால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் தனது படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி சாரதாவிற்கு பேசிய சம்பளத்தை தர இயலாததால் தன்னால் முடிந்த ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அவருக்கு அளித்தார்.
தொடர்ந்து வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால் நடிகை சாரதாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பள பாக்கி தரமுடியாமலே போனது. அந்த வசனங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வந்தது ...எந்த படத்திற்கு தெரியுமா ?நடிகை தீப்தி பேட்டி காலங்கள் கரைய, கரைய நடிகையும் அந்த சம்பள பாக்கியை பற்றி மறந்தே போனார். இந்த இடைப்பட்ட காலங்களில் வி.வி.ஆண்டனியின் பொருளாதார நிலை தனது பிள்ளைகளால் உயர்ந்தது.
அதனால் வி.வி.ஆண்டனி, நடிகை ஊர்வசி சாரதாவிற்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று கொடுக்க விரும்பினார். அந்த சமயத்தில் கொச்சி டவுன் ஹாலுக்கு ஒரு சினிமா சார்ந்த விழா ஒன்றிற்கு நடிகை ஊர்வசி சாரதா வரவிருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட வி.வி.ஆண்டனி அந்த விழாவிலேயே அவரது சம்பள பாக்கியுடன் சேர்த்து கூடுதலாக ஒரு தொகையை கொடுக்க எண்ணினார்.
அந்த விழாவின் இடையில் வி.வி. ஆண்டனி, ஊர்வசி சாரதாவை நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசிய பிறகு இந்த பண கவரை அவரிடம் கொடுத்தார். இந்த நிகழ்வு, அங்கு இருந்த அனைவரையும் வியப்பில் அதிர்ச்சி அடையவைத்தது. 40 ஆண்டுகள் ஆன பின்னும் தயாரிப்பாளரின் நேர்மையை பார்த்த சாரதா அப்படியே நெகிழ்ச்சியில் திகைத்தார். இருவரும் தங்களது மலரும் நினைவுகள் குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.























