ஆக்ஷன் மோடில் களம் இறங்கி ராஷ்மிகா - புதுப்பட அப்டேட்
சினிமா
தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர சமீபத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது.
இந்நிலையில் ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக இருக்கும் ஒரு கதைக்களத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் காட்டில் மிகவும் ஆக்ரோஷத்துடன் கையில் ஒரு ஆயுதத்தை வைத்து இருக்கிறார் இவரை சுற்றி பல அடியாட்கள் இவரை தாக்க வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தை அறிமுக இயக்குநரான ரவிந்திரா புல்லே இயக்குகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை நாளை காலை 10.08 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






















