• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்தார்த்தின் 3 BHK படக்குழுவை பாராட்டிய சூரி

சினிமா

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

'3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் உருக்கமாக எமோஷனலாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சிகள் அமைந்துள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படக்குழுவை வாழ்த்தி நடிகர் சூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "ஒரு வீடு… ஒரு கனவு…

தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம்!

தம்பி அருண் விஷ்வா அவர்களுக்கும், அவருடைய அருமையான குழுவுக்கும், இந்த "3BHK" உணர்ச்சி நிறைந்த பயணத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்! ❤️

ஜூலை 4 அன்று, நம் இதயங்களை ஆழமாக தொடப்போகும் இந்த நல்ல கதை,வெற்றியின் வானில் பிரகாசமாக ஒளிரட்டும்!

உங்கள் கனவு நிஜமாகி, உயர்ந்த வெற்றியை தொடட்டும்! " என பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply