ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
இலங்கை
மேலதிக நேரக் கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை சுதந்திர ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (SLFRWA) செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.























