செம்மணியில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு கிளிநொச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட விஷமிகளே காரணம்
இலங்கை
செம்மணியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ”அணையா தீபம்” போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சென்றிருந்த வேளை அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்ளை வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து குறித்த அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ” மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் எனவும், அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அது அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
எவ்வாறு இருப்பினும் குறித்த போராட்டத்தினை குழப்பும் வகையில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட விஷமிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர் எனவும், அவர்களினாலேயே அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கிளிநொச்சியில் கள்ளகாணி பிடிப்பவரும் பார்போமிட் பெறுவதற்கு விண்ணப்பித்து விட்டு இருப்பவரும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுமே அங்கு பதற்ற நிலையை தோற்றுவித்ததாகவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.























