அமெரிக்காவின் உளவு அறிக்கை கசிந்தது
ஈரானின் அணுசக்தித் திட்டம் பல ஆண்டுகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின்னர் இஸ்ரேல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கையொன்று கசிந்ததை அடுத்து இஸ்ரேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்துரைத்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர், கசிந்த அந்த அறிக்கை, குறைந்தளவான நம்பிக்கை அடிப்படையிலானது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீடிப்பதாக சர்வதேச சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன






















