• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கார்த்தி 29 படத்தில் இணையும் நானி

விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து நடிகர் கார்த்தி படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும். அதனால், இப்படத்தை கார்த்தி 29 என்று அழைக்கப்படுகிறது.

படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எக்ஸ் தள பதிவில் கனவே என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றுடன் விரைவில்.. காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.

இதனால், இது கார்த்தி 29 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


 

Leave a Reply