நடிகர் வெற்றியின் முதல்பக்கம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்
சினிமா
நடிகர் வெற்றி, பிரபுவுடன் இணைந்து 'ராஜபுத்திரன்' படத்தில் கடைசியாகத் திரையில் காணப்பட்ட நிலையில், தற்போது அனிஷ் அஷ்ரப் இயக்கத்தில் 'முதல்பக்கம்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
'முதல்பக்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று (புதன்கிழமை) இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டார். இந்தப் படத்தில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான குறிப்பை அளிக்கிறது.
இப்படத்திற்கு அரவி ஒளிப்பதிவு செய்ய, வி.எஸ். விஷால் படத்தொகுப்பு செய்கிறார். சுரேஷ் மற்றும் வெங்கட் கலை இயக்குநர்களாகவும், ஆக்ஷன் நூர் சண்டைக் காட்சிகளையும், தினேஷ் மற்றும் தினா நடன அமைப்பையும் மேற்கொள்கின்றனர்.
'முதல்பக்கம்' படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிக்கிறார்.























