கேப்டன் மில்லர் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா
சினிமா
தமிழின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ஒருபக்கம் ஆர் ஜே. பாலாஜி, இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
ஆர் ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு 'கருப்பு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திரிஷா நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படங்களுக்கு அடுத்து சூர்யா சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. எனவே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் மற்றும் சூர்யா இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே சூர்யாவை ரோலக்ஸ் என்ற கத்தாபாத்திரமாக லோகேஷ் நடித்திருந்தார். அருண் மாதேஸ்வரன் படங்களோ சர்வ சாதாரணமாக ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் என்பதால் வெயிட்டான சம்பவம் லோடிங் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
கடைசியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.























