• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது ஈரான்

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு வேலை பார்த்த 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியாக ஈரான் அரசு குற்றம் சாட்டி இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

இதே குற்றச்சாட்டுகளுடன் ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply