• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது – CPC உத்தரவாதம்

இலங்கை

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது.

2 மாத காலத்திற்கான எரிபொருள் கொள்முதல் கட்டளைகள் (ஆர்டர்கள்) ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அவர்,

எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளை ஆர்டர் செய்துள்ளோம்.

அந்த ஆர்டர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு இலங்கையில் எந்த காரணத்திற்காகவும் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது.

பின்னர் எங்கிருந்து எரிபொருளைப் பெறுகிறோம் என்பதுதான் பிரச்சினை.

பின்னர் போரின் தாக்கம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதேநேரம், தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக எரிபொருள் இருப்புக்களை குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
 

Leave a Reply