• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர்

இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயம் இன்று(25) காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.

அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்றைய தினம் (25) குறித்த மண்டபத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையினை பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களது வேண்டுகோல்களை கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் பொதுமக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவரிடம் கையளித்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக யுபிலி மண்டபத்தின் முன்பாக காலை 8.00 மணியளவில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், அமைப்புகள், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 

Leave a Reply