• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களுக்கிடையில் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவர் ஹல்வத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக 23 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply