• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அணையா தீபம் போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்

இலங்கை

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி  முதல் 3 நாட்கள்   ”அணையா தீபம்’  எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தின்   இறுதி நாளான இன்று  பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது  போராட்டக் களத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்ளை வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply