• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் இந்தப் பகுதிகளில் கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை

கனடா

கனடாவின் கிழக்குப் பகுதிகளில் வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம், வெப்பநிலை பின்வரும் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது (ஈரப்பதம் தவிர்த்து):

• டொரொன்டோ – 34°C

• ஒட்டாவா – 34°C

• மோன்ரியல் – 35°C

• கியூபெக் நகரம் – 32°C

• ஹாலிஃபெக்ஸ் – 29°C

இது இந்த கோடை பருவத்தின் முதல் முக்கியமான வெப்ப அலை. இதனால் மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும்,” என சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உங்களையும், பிறரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் – கடுமையான வெப்பநிலை அனைவரின் உடல்நிலையையும் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

மக்கள் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
 

Leave a Reply