• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் தனுஷின் குபேரா படம் தமிழகத்தில் மட்டுமே இதுவரை செய்துள்ள மொத்த வசூல்.. 

சினிமா

தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. இப்படத்தை அவரே இயக்கி, நடித்தும் இருந்தார்.

அப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியானது, ஆனால் சாதாரண வரவேற்பை தான் பெற்றது. இப்போது கடந்த ஜுன் 20ம் தேதி தனுஷ் நடிப்பில் குபேரா படம் வெளியானது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷுடன், ராஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிய இப்படம் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

தற்போது 5 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 17 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

Leave a Reply