பன் பட்டர் ஜாம் படத்தின் ஸ்டீலர் காட்சியை பார்த்து விஜய் பாராட்டு
சினிமா
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஸ்டீலர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மகன் ராஜு-க்கும் அம்ம சரண்யா பொன்வன்ணனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜு தன் முதல் நாள் கல்லூரி அனுபவத்தை மிகவும் நகைச்சுவையாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது என நடிகரும் தவெக தலைவருமான விஜய் பாராட்டி உள்ளதாக இந்த படத்தின் கதாநாயகன் ராஹூ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்பான தளபதியிடமிருந்து அழைப்பு வந்தது படத்தின் ஸ்டீலர் "வேரா லெவல் பா... உன்மைலே தியேட்டர் பாக்கணும்னு தோணுது"
நான் வேறு என்ன கேட்க முடியும்? நான் இன்று தளபதியை சிரிக்க வைத்தேன்... இதுதான் எனக்கு உலகம்.
இது நிஜமா?
ஆஹா!! நன்றி தலைவா!!!!
என கூறினார்.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.






















